மட்டக்களப்பில் முட்டை ஒன்றை 60 ரூபாவுக்கு விற்ற வர்த்தகருக்கு ஒரு இலச்சம் ரூபா அபதாரம்

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் கட்டுப்பாட்டு விலையை மீறி 60 ரூபாவுக்கு முட்டை விற்பனை செய்த வர்த்தகரை ஒரு இலச்சம் ரூபா அபதாரமாக செலுத்துமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர்போல் கடந்த வியாழக்கிழமை உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்ட நுகர்வேர் அதிகாரசபை உதவி பணிப்பாளர் ஆர்.எப்.அன்வர் சதாத் தலைமையிலான குழுவினர் சம்பவதினமான வியாழக்கிழமை (24) திகதி திடீர் சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்தனர்.
இதன்போது அரசாங்கம் அறிவித்த முட்டையின் விலை 50 ரூபாக இருந்தபோது அதனை மீறி வர்த்தகர் ஒருவர் 60 ரூபாவுக்கு முட்டை விற்பனை செய்து வந்த நிலையில் அவரை பிடித்ததுடன் அவருக்கு எதிராக உடனடியாக அன்றைய தினம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர்போல் முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து அவரை அபதாரமாக ஒரு இலச்சம் ரூபா செலுத்துமாறு உத்தரவிட்டுதீர்ப்பளித்தர்;. இதேவேளை முட்டையின் கட்டுப்பாட்டுவிலை 50 ரூபாவாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் மொத்த வியாபரிகளிடமிருந்து 58 ரூபாவுக்குதான் முட்டையை கொள்வனவு செய்ய வேண்டியுள்ளதுடன் அதனை 60 ரூபாவுக்கு விற்கவேண்டியுள்ளதுடன் அதில் இலாபமாக 50 சதம் மட்டும் பெற்றுக் கொள்ள முடியும்.
இவ்வாறான நிலையில் வடிக்கையாளர்களுக்கு 60 ரூபாவுக்கு முட்டையை விற்கும் போது கட்டுப்பாட்டு விலையை மீறி கூடிய விலைக்கு முட்டையை விற்றதாக நுகர்வோர் அதிகாரசபை எமக்கு எதிராக வழக்கு தொடருகின்ற போது ஒரு முட்டைக்கு ஒரு இலச்சம் ரூபா அபதாரம் விதித்தால் என்ன செய்வது. எனவே முட்டை வியாபாரம் வேண்டாம் என முட்டை வியாபாரத்தில் ஈடுபட்ட பல வர்த்தகர்கள் முட்டை வியாபாரத்தை நிறுத்தியுள்ளனர். இதனால் முட்டைக்கு மாவட்டத்தில் பலத்த தட்டுபாடு நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது
பிந்திய செய்திகள்
வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புகளை பெற்றுத் தருவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட இளம்பெண் ஒருவரும் பெண்ணொருவரும் சிலாபத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்
இலங்கையர்களுக்கு மீண்டும் ஈ-விசா (e-visa) அனுமதி வழங்க இந்தியா தீர்மானித்துள்ளது.
தற்போது நிலவி வருகின்ற சீரற்ற கால நிலை காரணமாக ஏற்பட்டுள்ள கடும்குளிருடன் கூடிய மழை மற்றும் வேகமான காற்று காரணமாக கிளிநொச்சியில் பலகிராமங்களி
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட மட்டக்களப்பு நகர் உள்ளிட்ட பகுதிகளில் உணவு தயாரிப்பில் ஈடுபடும் ஹோட்டல்கள், பாடசாலைகளின
உள்ளூராட்சி தேர்தலை நடத்த தோராயமாக, 10 பில்லியன் ரூபாய் செலவு ஏற்படுமென தேசிய தேர்தல் ஆணையம் மதிப்பீட்டுள்ளது.
தென்மேற்கு வங்காளவிரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்பட்ட தீவிர புயலானது (Severe Cyclonic Storm) கடந்த 06 மணித்தியாலத்தில் 12km/h வேகத்தில் மே
நாட்டில் டெங்கு நோயின் பரவல் வேகமாக அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்காள விரிகுடா மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்பட்ட ஆழ்ந்த தாழமுக்கமானது கடந்த 06 மணித்தியாலத
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் எனக் கூறி பம்பலப்பிட்டி டூப்ளிகேஷன் வீதியில் காரை நிறுத்தி 27 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையடித்த நபர் ஒருவர்