சீரற்ற காலநிலையால் 160 இற்கு மேற்பட்ட கால்நடைகள் உயிரிழப்பு

தற்போது நிலவி வருகின்ற சீரற்ற கால நிலை காரணமாக ஏற்பட்டுள்ள கடும்குளிருடன் கூடிய மழை மற்றும் வேகமான காற்று காரணமாக கிளிநொச்சியில் பலகிராமங்களில் 165 க்கு மேற்பட்ட மாடுகள் மற்றும் 3 ஆடுகள் என்பன இறந்துள்ளன. இந்த இறப்புக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என கிளிநொச்சி பிராந்திய கால்நடை திணைக்களம் தெரிவித்துள்ளது
கிளிநொச்சி கௌதாரிமுனை வெட்டுக்காடு கிராமத்தில் 60 மாடுகளும், நல்லூர் சாமிபுலத்தில் கிராமத்தில் 75 மாடுகளும், பொன்னகர் கிராமத்தில் 13 மாடுகளும், புன்னை நீராவியில் 07 மாடுகளும், நாகேந்திரபுரத்தில் 05 மாடுகளும், பூநகரியில் 05 மாடுகளுமாக 130 க்கு மேற்பட்ட மாடுகள் இறந்துள்ளதாக கிளிநொச்சி பிராந்திய கால்நடை திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்தோடு திருவையாறு கிராமத்தில் கடும் காற்று காரணமாக மரம் முறிந்து வீழ்ந்ததில் மூன்று ஆடுகள் இறந்துள்ளதோடு, மேலும் பல ஆடுகள் மற்றும் மாடுகள் என்பன காயங்களுக்குள்ளாகியுள்ளன.
கடும் குளிருடன் கூடிய மழை மற்றும் காற்று காரணமாக மரங்கள் முறிந்து வீழ்ந்ததன் காரணமாகவும் இவ்வாறு கால்நடைகள் இறந்துள்ளதாகவும். இன்றுமதியம்(09) வரை மேற்படி எண்ணிக்கையை உறுதிப்படுத்தக் கூடியதாக இருந்தது என்றும் தெரிவிததுள்ள கால்நடை திணைக்களம் இந்த சீரற்ற காலநிலை காரணமாக இறந்த கால்நடைகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.
பிந்திய செய்திகள்
டுவிட்டரை உருவாக்கியவர்களில் ஒருவரான ஜாக் டோர்சி தற்போது புதிய சமூக ஊடக தளம் ஒன்றை உருவாக்கி உள்ளார். இதன் பெயர் ப்ளூஸ்கை.
மனிதனின் நவீன கண்டுபிடிப்புகள் ஏராளம். அவற்றில் ஒன்றுதான் ஆளில்லாமல் வானில் பறக்கும் ட்ரோன் விமானம்.
சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி தொடர்பிலான திட்டத்தை நடைமுறைப்படுத்தும் யோசனை பாராளுமன்றத்தில் 95 மேலதிக வாக்குகளினால் நேற்று நிறைவேற்றப்பட்டது.
மினுவாங்கொடையில் அமைந்துள்ள தனியார் பாடசாலையொன்றின் பெண் ஆசிரியை ஒருவர் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தெரிவிக்கவில்லை எனக் கூறி பலவந்தமாக முத்தமிட்ட
ஏப்ரல் பண்டிகைக் காலத்தில் நடைபாதை வியாபாரிகள் பொதுமக்களுக்கு இடையூறு இன்றி வியாபாரத்தில் ஈடுபடுவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை
ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையத்தின் தரவுகளின்படி, மரக்கறிகளின் விலை கடந்த செவ்வாய்க்கிழமையுடன் (04ஆம் திகதி) ஒப்பிடுகைய
வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புகளை பெற்றுத் தருவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட இளம்பெண் ஒருவரும் பெண்ணொருவரும் சிலாபத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்
இலங்கையர்களுக்கு மீண்டும் ஈ-விசா (e-visa) அனுமதி வழங்க இந்தியா தீர்மானித்துள்ளது.
தற்போது நிலவி வருகின்ற சீரற்ற கால நிலை காரணமாக ஏற்பட்டுள்ள கடும்குளிருடன் கூடிய மழை மற்றும் வேகமான காற்று காரணமாக கிளிநொச்சியில் பலகிராமங்களி