ட்ரோன் தொழில்நுட்பம்

Main image
Image

மனிதனின் நவீன கண்டுபிடிப்புகள் ஏராளம். அவற்றில் ஒன்றுதான் ஆளில்லாமல் வானில் பறக்கும் ட்ரோன் விமானம். ட்ரோன் என்றால் (Unmanned aerial vehicle) ஆளில்லா பறக்கும் வாகனம் என்று பொருள்.

தொழில்நுட்பத்தின் பரிணாமம் குறைந்த முயற்சியுடன் எவரும் தங்கள் பணிகளை செய்யக்கூடிய ஒரு சகாப்தத்திற்கு வழிவகுத்துள்ளது. உலகில் பரவலாக பயன்படுத்தப்படும் பல்வேறு தொழில்நுட்பங்களில் ட்ரோன் தொழில்நுட்பம் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது. ஏனெனில் இது தொழில்நுட்ப வளர்ச்சியில் அனைவரையும் கவரக்கூடிய விளைவாகும். ட்ரோன்கள் தரையில் இருந்து விமானிகளால் கட்டுப்படுத்தப்படும் அல்லது முன்திட்டமிட்ட பணியை மேற்கொள்ளும். ட்ரோன் தொழில்நுட்பத்தின் தொடர்ச்சியான முன்னேற்றங்கள் பல துறைகளிலும் பயனளிக்கும் வகைகளில் பயன்படுத்தப்படுகின்றன.

பல்வேறு நேர்மறையான அம்சங்கள் இருந்த போதிலும், ட்ரோன்களின் ஏராளமான திறன்கள் மக்களின் சுதந்திரத்திற்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையிலும் அமைகின்றன. தொழில்நுட்பத்தின் நிரந்தர வளர்ச்சியின் காரணமாக எதிர்காலத்தில் ட்ரோன்கள் இன்னும் கவர்ச்சிகரமான திறன்களுடன் உருவாக்கப்படலாம்.

முக்கியமாக உலகில் பாதுகாப்புப் பயன்பாட்டில் ட்ரோன் கமராவின் பங்கு அதிகமாகும். பொலிஸாரும் இராணுவத்தினரும் தங்களது பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ட்ரோன் கமராவை பயன்படுத்துகின்றார்கள். ட்ரோன்கள் பல வகைகளில் கிடைக்கின்றன. பறக்கும் நேரம், பறக்கும் தூரம், கமராவின் தரம் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடுகிறது.

குறிப்பாக பாதுகாப்புக்காகப் பயன்படுத்தப்படும் ட்ரோன்கள் அதிக நேரம், நீண்ட தூரம் பறக்கக் கூடியவையாக உள்ளன. ஆட்கள் நுழைய முடியாத மலைப்பகுதிகள், காட்டுப் பகுதிகள் என இக்கட்டான நிலப்பரப்பில் எல்லாம் ட்ரோன் 'மூன்றாவது கண்' போன்று பறக்கின்றது. நேரடியாக நாம் இருக்கும் இடத்திலிருந்து, வானில் இருந்து பார்க்கும் வசதியை கொடுப்பதால் ட்ரோன் கமரா என்பது மிகப்பெரிய கண்டுபிடிப்பாகவே கருதப்படுகிறது.

பத்தாயிரம் ரூபா தொடக்கம் பல இலட்சம் ரூபா வரையிலான ட்ரோன்கள் சந்தையில் கிடைக்கின்றன. அவற்றை பலரும் வாங்கி தங்களுக்குப் பிடித்த ஊர்களை இதுவரை பார்த்திராத கோணத்தில் படம் எடுத்து ரசிக்கின்றனர். திருமணங்கள், சுற்றுலா, திரைப்படக் காட்சிகள், திருவிழாக்கள், பேரிடர்கள், போராட்டங்கள், பாதுகாப்பு என பலவற்றுக்கும் பயன்படும் ட்ரோன் கமரா கழுகுப் பார்வையில் நம் கண்களுக்கு புதிய கோணத்தில் காட்சிகளை வழங்குகின்றது.

நாம் எதிர்வரும் காலங்களில் ட்ரோனை வாடகைக்குப் பெறக்கூடிய வாய்ப்பும் உள்ளது. ட்ரோன் உற்பத்திக் கைத்தொழில், பழுதுபார்த்தல், அதற்கான பயிற்சிகளை வழங்கும் நிறுவனங்கள் என பல வேலைவாய்ப்புகள் உருவாகும் சாத்தியமும் உள்ளது.

இலங்கையில் ஆளில்லா விமானத்தை பயன்படுத்த விரும்பினால் அதற்கான அனுமதியை பெற வேண்டும். அனைத்து ட்ரோன் கமராக்களும் இலங்கையின் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். திட்டமிடப்பட்ட அனைத்து பறக்கும் இடங்களிலும் அனுமதிப்பத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

ட்ரோன் சாதனங்கள் பல்வேறு துறைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருவதனால் தற்போது வெகுவாக பிரபல்யம் அடைந்து வருகின்றன. இதன் காரணமாக எதிர்காலத்தில் புதிய தொழில்நுட்பங்கள் உள்ளடக்கி இந்த பறக்கும் சாதனங்கள் மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கலாம்.

பிந்திய செய்திகள்

Main image

மட்டக்களப்பில் 7 வயது சிறுமியை தந்தை மற்றும் மாமனார் இணைந்து கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ள நிலையில் குறித்த சிறுமி தற்பொழுது மட்டக்களப்பு ப

Main image

டுவிட்டரை உருவாக்கியவர்களில் ஒருவரான ஜாக் டோர்சி தற்போது புதிய சமூக ஊடக தளம் ஒன்றை உருவாக்கி உள்ளார். இதன் பெயர் ப்ளூஸ்கை.

Main image

மனிதனின் நவீன கண்டுபிடிப்புகள் ஏராளம். அவற்றில் ஒன்றுதான் ஆளில்லாமல் வானில் பறக்கும் ட்ரோன் விமானம்.

Main image

சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி தொடர்பிலான திட்டத்தை நடைமுறைப்படுத்தும் யோசனை பாராளுமன்றத்தில் 95 மேலதிக வாக்குகளினால் நேற்று நிறைவேற்றப்பட்டது.

Main image

மினுவாங்கொடையில் அமைந்துள்ள தனியார் பாடசாலையொன்றின் பெண் ஆசிரியை ஒருவர் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தெரிவிக்கவில்லை எனக் கூறி பலவந்தமாக முத்தமிட்ட

Main image

ஏப்ரல் பண்டிகைக் காலத்தில் நடைபாதை வியாபாரிகள் பொதுமக்களுக்கு இடையூறு இன்றி வியாபாரத்தில் ஈடுபடுவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை

Main image

ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையத்தின் தரவுகளின்படி, மரக்கறிகளின் விலை கடந்த செவ்வாய்க்கிழமையுடன் (04ஆம் திகதி) ஒப்பிடுகைய

Main image

வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புகளை பெற்றுத் தருவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட இளம்பெண் ஒருவரும் பெண்ணொருவரும் சிலாபத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்

Main image

இலங்கையர்களுக்கு மீண்டும் ஈ-விசா (e-visa) அனுமதி வழங்க இந்தியா தீர்மானித்துள்ளது.