அரசாங்க அலுவலகங்களில் மட்டுப்படுத்தப்பட்ட ஊழியர்களைக்கொண்டு சேவைகளை முன்னெடுக்க தீர்மானம்!

அரசாங்க அலுவலகங்களில் இன்று (திங்கட்கிழமை) முதல் மட்டுப்படுத்தப்பட்ட ஊழியர்களைக்கொண்டு சேவைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான சுற்று நிருபம் பொது நிர்வாக அமைச்சின் செயலாளரினால் கடந்தவாரம் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி இன்று முதல் 2 வாரங்களுக்கு இந்த நடைமுறை அமுல்படுத்தப்படவுள்ளது. குறைந்தளவான ஊழியர்களை சேவைக்கு அழைக்கும் போது, சுழற்சி முறை மற்றும் வேறு ஏதேனும் பொறிமுறைமையை பின்பற்ற முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டாய சேவைக்கு அழைக்கப்படுகின்ற நாட்களில் சேவைக்கு சமூகமளிக்காத ஊழியர்களது பணிநாள், தனிப்பட்ட விடுமுறையில் கழிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், அனைத்து ஊழியர்களும் இணையவழியில் தொழிலாற்றுவதற்கு எந்நேரமும் தயாராக இருக்க வேண்டும் எனவும் அந்த சுற்றறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பிந்திய செய்திகள்
டுவிட்டரை உருவாக்கியவர்களில் ஒருவரான ஜாக் டோர்சி தற்போது புதிய சமூக ஊடக தளம் ஒன்றை உருவாக்கி உள்ளார். இதன் பெயர் ப்ளூஸ்கை.
மனிதனின் நவீன கண்டுபிடிப்புகள் ஏராளம். அவற்றில் ஒன்றுதான் ஆளில்லாமல் வானில் பறக்கும் ட்ரோன் விமானம்.
சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி தொடர்பிலான திட்டத்தை நடைமுறைப்படுத்தும் யோசனை பாராளுமன்றத்தில் 95 மேலதிக வாக்குகளினால் நேற்று நிறைவேற்றப்பட்டது.
மினுவாங்கொடையில் அமைந்துள்ள தனியார் பாடசாலையொன்றின் பெண் ஆசிரியை ஒருவர் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தெரிவிக்கவில்லை எனக் கூறி பலவந்தமாக முத்தமிட்ட
ஏப்ரல் பண்டிகைக் காலத்தில் நடைபாதை வியாபாரிகள் பொதுமக்களுக்கு இடையூறு இன்றி வியாபாரத்தில் ஈடுபடுவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை
ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையத்தின் தரவுகளின்படி, மரக்கறிகளின் விலை கடந்த செவ்வாய்க்கிழமையுடன் (04ஆம் திகதி) ஒப்பிடுகைய
வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புகளை பெற்றுத் தருவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட இளம்பெண் ஒருவரும் பெண்ணொருவரும் சிலாபத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்
இலங்கையர்களுக்கு மீண்டும் ஈ-விசா (e-visa) அனுமதி வழங்க இந்தியா தீர்மானித்துள்ளது.
தற்போது நிலவி வருகின்ற சீரற்ற கால நிலை காரணமாக ஏற்பட்டுள்ள கடும்குளிருடன் கூடிய மழை மற்றும் வேகமான காற்று காரணமாக கிளிநொச்சியில் பலகிராமங்களி