கிழக்கில் அடுத்த வாரம் முதல் பாடசாலைகளில் புதிய நடைமுறை

Main image
Image

சமகால எரிபொருள் பற்றாக்குறை பிரச்சனை காரணமாக கிழக்கு மாகாணத்தில் அடுத்த வாரம் முதல் மூன்று தினங்களுக்கு பாடசாலைகளை நடாத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. திங்கள், வெள்ளி தவிர்ந்த செவ்வாய், புதன் ,வியாழக்கிழமை ஆகிய மூன்று நாட்களும் பாடசாலைகள் வழமை போல் நடைபெறும். இந்த ஆலோசனையை கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் முன்வைத்தார்.

கிழக்கு மாகாண கல்வி செயலாளர், மாகாண கல்வி பணிப்பாளர், வலயக்கல்விப் பணிப்பாளர்கள் உடனான Zoom தொழில்நுட்ப கூட்டத்தில் ஆளுநர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.இத்தகவலை அந்தந்த வலய கல்வி பணிப்பாளர்கள் அவரவர் வலய புலனக் குழுவில் வாட்ஸ்அப் குழுவில் அதிபர் ஆசிரியர்களுக்கு அறிவித்திருக்கிறார்கள். செவ்வாய், புதன், வியாழக்கிழமை நாட்களிலே ஆசிரியர்களையும் மாணவர்களையும் முழுமையாக வரவழைத்து, மாணவர்களுக்கு முழு நேரசூசி வழங்கி, முழு அளவிலான கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் .இதற்கு பெற்றோர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று ஆளுநர் கேட்டுக் கொண்டார் .

இதேவேளை, ஆசிரியர் தொழிற்சங்கங்கள் சில பிழையான வழிநடத்தல்களை முன்னெடுக்க திட்டமிட்டு இருக்கின்றது. அதனை பொருட்படுத்தாமல் அதிபர்களும் ஆசிரியர்களும் இந்த விடயத்திலே ஒத்துழைக்க வேண்டும். முடியுமானால் மூன்று மாவட்ட அரசாங்க அதிபர் உடன் பேசி எரிபொருள் பிரச்சனையை தீர்ப்பதற்கு உதவுவதாக ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். போக்குவரத்து சபையின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். போக்குவரத்து பிரச்சினை உள்ள பாடசாலைகளுக்கு பொது போக்குவரத்து நடத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது .

வருகின்ற யூலை மாதம் திங்கட்கிழமை 4 ஆம் திகதி தொடக்கம் வெள்ளிக்கிழமை 8 ஆம் திகதிவரையிலான காலப்பகுதியில் இந்த மூன்று நாள் பாடசாலை இடம்பெறும். மேலும், அதன் பின்பு எவ்வாறு பாடசாலையை நடத்துவது என்று பின்னர் விரிவாக அறிவிக்கப்படும் என்று அந்த கூட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

Main image

சீன கடனுதவியில் கொழும்பில் நிர்மாணிக்கப்பட்ட தாமரை கோபுரத்தை அடுத்த மாதம் 15 ஆம் திகதி முதல் திறந்து வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.  வர்த்தக நன்மைகளை

Main image

வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் எதிர்வரும் காலங்களில் ஓட்டுநர் உ

Main image

அடுத்த வருடம் இலங்கையின் 75வது சுதந்திர தின கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்வதற்கு அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிக்கும் கோரிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

Main image

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் விரைவில் மீள ஆரம்பிப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு எதிர்பார்த்துள்ளது.

Main image

பூப்புனித நீராட்டு விழா, ஒவ்வொரு பிரதேசங்களில் வித்தியாசமாகக் நடத்தப்படும்.

Main image

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள மந்துவில் அரசரத்தினம் வித்தியாலத்தில் புலமைப் பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு கல்வி கற்பித்த

Main image

யாழ்.அச்சுவேலி – காலானை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கோழிக்குஞ்சு ஒன்று நான்கு கால்களுடன் பிறந்துள்ளது.

Main image

இந்த வருடத்தின் முதல் 4 மாதங்களில் மாத்திரம் யானை -மனிதர்களுக்கு இடையிலான மோதலில் 34 பேர் மரணித்துள்ளதாக விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்

Main image

இரண்டு பிள்ளைகளின் தந்தையும் யுவதியொருவரும் காதலித்து வந்துள்ளனர்.