பெற்றோல் திருடும் போது பற்றிக்கொண்ட தீ; மாட்டிக்கொண்ட திருடன்

Main image
Image

விசுவமடு - வள்ளுவர் புரம் கிராமத்தில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த ஒருவர் பெற்றோல் திருடும் போது வசமாக சிக்கியுள்ளார். குறித்த நபர் வள்ளுவர் புரம் கிராமத்தில் வீடுகளில் புகுந்து தண்ணீர் இறைக்கும் மோட்டர்கள், தென்னை மரங்களில் ஏறி தேங்காய்கள் பறித்தல், வழிப்பறி உள்ளிட்ட கொள்ளைகளில் ஈடுபட்டு வந்துள்ள நிலையில் அண்மை நாட்களாக வீடுகளில் இருக்கும் மோட்டார் சைக்கிள்களில் பெற்றோல் திருடியும் வந்ததாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் இன்று அதிகாலை வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பெற்றோலினை திருட முற்பட்ட போது மோட்டார் சைக்கிள் தீப்பற்றிக் கொண்டுள்ளது.

இதையடுத்து வீட்டிலுள்ளவர்கள் அயலவர்களின் உதவியுடன் தீயினை அணைத்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதுடன், திருடன் அருகில் உள்ள பற்றைக்காட்டில் மறைந்திருந்த வேளை இளைஞர்கள் ஒன்று திரண்டு திருடனை பிடித்து கட்டிவைத்துக்கொண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். தொடர்ந்து புதுக்குடியிருப்பு பொலிஸார் திருடனை கைது செய்து கொண்டுள்ளதுடன் எரிந்து சேதமான மோட்டார் சைக்கிளையும் கொண்டு சென்றுள்ளார்கள். சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட திருடனிடம் விசாரணைகளை மேற்கொண்டு சட்டத்தின் முன் நிறுத்தும் நடவடிக்கையில் புதுக்குடியிருப்பு பொலிஸார் ஈடுபட்டுள்ளார்கள்.

பிந்திய செய்திகள்

Main image

வீடொன்றிலிருந்து காணாமல் போன குழந்தை ஒன்று உர பையில் சுற்றி முட்புதரில் வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

Main image

விரைவில் திருமணம் செய்ய உள்ள மற்றும் உயர் கல்விக்காக வெளிநாடுகளுக்கு செல்லவுள்ள இளைஞர்களுக்காக சமையல் பாடநெறி ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.

Main image

2022 ஆம் ஆண்டுக்கான ரீடர்ஸ் சோய்ஸ் விருதுகளின் முடிவுகளின் அடிப்படையில், உலகின் சிறந்த நட்பு நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இடம்பெற்றுள்ளது.அந்த வ

Main image

மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத்தின் அனுசரணையில் கவிக்கோ வெல்லவூர்க் கோபால் எழுதிய கொக்கட்டிச்சோலை குறவஞ்சி நூல் வெளியீடு மட்டக்களப்பு பிள்ளையாரடி  தம

Main image

சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளன.

Main image

காத்தான்குடி கடலில் தோணியில் மீன்பிடிக்க சென்ற மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Main image

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது மது போதையில் வந்த கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். யாழ்.

Main image

சாய்ந்தமருது கடலில் சடலமொன்று மிதந்து வருவதாக சாய்ந்தமருது பொலிஸாருக்கு மீனவர்களினால் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் கல்முனை கடற்படையின் உதவிய

Main image

நாட்டில் உள்ள குழந்தைகளுக்கும் தாய்மார்களுக்கும் தொடர்ந்தும் உயர்தர திரிபோஷ வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல த