தண்டவாளத்தில் தடம்புரண்ட முறையற்ற காதல்

Main image
Image

இரண்டு பிள்ளைகளின் தந்தையும் யுவதியொருவரும் காதலித்து வந்துள்ளனர். அவர்கள் இருவரும் தண்டவாளத்தில் பயணித்து கொண்டிருந்த போது, விபத்தில் சிக்கியுள்ளனர்.
 சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது... பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதிய இருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவரும் யுவதி ஒருவருமே இவ்வாறு காயமடைந்துள்ளனர். நேற்று (14) பிற்பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தில் காயமடைந்த இருவரும் டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கும் யுவதி நுவரெலியா வைத்தியசாலைக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

ஹட்டன்- கொட்டகலை ரயில் நிலையங்களுக்கு இடையில் உள்ள சிங்கமலை சுரங்கத்துக்கு அருகிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரண்டு பிள்ளைகளின் தந்தை, ஹட்டன்- எபோட்சிலி தோட்டத்தைச் சேர்ந்த 27 வயதான வயதானவர் என்றும் 17 வயது யுவதி டிக்கோயா பகுதியைச் சேர்ந்தவர் என்றும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இருவரும் ரயில் பாதையில் நடந்து சென்றுக்கொண்டிருந்த போது, பின்னால் வந்த ரயிலில் மோதுண்டுள்ளனர்.இதனால் இருவரும் கடும் காயமடைந்தனர். ரயில் கட்டுபாட்டாளரால் ஹட்டன் ரயில் நிலையத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன் அவ்விருவரும் வைத்தியசாலைக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது, குறித்த இருவரும் காதலர்கள் என தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பிந்திய செய்திகள்

Main image

வீடொன்றிலிருந்து காணாமல் போன குழந்தை ஒன்று உர பையில் சுற்றி முட்புதரில் வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

Main image

விரைவில் திருமணம் செய்ய உள்ள மற்றும் உயர் கல்விக்காக வெளிநாடுகளுக்கு செல்லவுள்ள இளைஞர்களுக்காக சமையல் பாடநெறி ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.

Main image

2022 ஆம் ஆண்டுக்கான ரீடர்ஸ் சோய்ஸ் விருதுகளின் முடிவுகளின் அடிப்படையில், உலகின் சிறந்த நட்பு நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இடம்பெற்றுள்ளது.அந்த வ

Main image

மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத்தின் அனுசரணையில் கவிக்கோ வெல்லவூர்க் கோபால் எழுதிய கொக்கட்டிச்சோலை குறவஞ்சி நூல் வெளியீடு மட்டக்களப்பு பிள்ளையாரடி  தம

Main image

சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளன.

Main image

காத்தான்குடி கடலில் தோணியில் மீன்பிடிக்க சென்ற மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Main image

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது மது போதையில் வந்த கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். யாழ்.

Main image

சாய்ந்தமருது கடலில் சடலமொன்று மிதந்து வருவதாக சாய்ந்தமருது பொலிஸாருக்கு மீனவர்களினால் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் கல்முனை கடற்படையின் உதவிய

Main image

நாட்டில் உள்ள குழந்தைகளுக்கும் தாய்மார்களுக்கும் தொடர்ந்தும் உயர்தர திரிபோஷ வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல த