4 மாதங்களில் யானை-மனித மோதல்களால் 34 பேர் பலி

Main image
Image

இந்த வருடத்தின் முதல் 4 மாதங்களில் மாத்திரம் யானை -மனிதர்களுக்கு இடையிலான மோதலில் 34 பேர் மரணித்துள்ளதாக விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை 47 காட்டு யானைகளும் உயிரிழந்ததாகவும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 8 மாகாணங்கள் மற்றும் 19 மாவட்டங்களில் உள்ள 131 பிரதேச செயலகப் பிரிவுகளில் யானை மற்றும் மனித மோதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இந்த ஆண்டில் உயிரிழந்த 47 காட்டு யானைகளில், 13 யானைகள் துப்பாக்கிச் சூடு காரணமாகவும், மேலும் 17 காட்டு யானைகள் மின்சாரம் தாக்கியும் மரணித்துள்ளன. கடந்த 3 வருடங்களில் யானை-மனித மோதல்கள் அதிகரித்து வருகின்றன. 2019ஆம் ஆண்டில் 407 யானைகள் உயிரிழந்த அதேவேளை 122 மனிதர்களும் உயிரிழந்துள்ளனர். 2020 ஆம் ஆண்டில், யானை-மனித மோதலால் 112 பேர் உயிரிழந்தனர். கடந்த வருடத்தில் யானை மனித மோதலால் 142 பேர் உயிரிழந்ததாகவும் விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

Main image

வீடொன்றிலிருந்து காணாமல் போன குழந்தை ஒன்று உர பையில் சுற்றி முட்புதரில் வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

Main image

விரைவில் திருமணம் செய்ய உள்ள மற்றும் உயர் கல்விக்காக வெளிநாடுகளுக்கு செல்லவுள்ள இளைஞர்களுக்காக சமையல் பாடநெறி ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.

Main image

2022 ஆம் ஆண்டுக்கான ரீடர்ஸ் சோய்ஸ் விருதுகளின் முடிவுகளின் அடிப்படையில், உலகின் சிறந்த நட்பு நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இடம்பெற்றுள்ளது.அந்த வ

Main image

மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத்தின் அனுசரணையில் கவிக்கோ வெல்லவூர்க் கோபால் எழுதிய கொக்கட்டிச்சோலை குறவஞ்சி நூல் வெளியீடு மட்டக்களப்பு பிள்ளையாரடி  தம

Main image

சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளன.

Main image

காத்தான்குடி கடலில் தோணியில் மீன்பிடிக்க சென்ற மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Main image

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது மது போதையில் வந்த கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். யாழ்.

Main image

சாய்ந்தமருது கடலில் சடலமொன்று மிதந்து வருவதாக சாய்ந்தமருது பொலிஸாருக்கு மீனவர்களினால் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் கல்முனை கடற்படையின் உதவிய

Main image

நாட்டில் உள்ள குழந்தைகளுக்கும் தாய்மார்களுக்கும் தொடர்ந்தும் உயர்தர திரிபோஷ வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல த