கடல் வழியாக வெளிநாட்டுக்கு செல்ல முயன்ற இரண்டு யுவதிகள் உட்பட 10 பேர் கைது

Main image
Image

சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாட்டுக்கு செல்ல முயன்ற 10 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். நேற்று (16) இரவு தலைமன்னார் குருசபாடு கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். மேலும் சட்டவிரோத குடியேற்றம் மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகளை இல்லாதொழிக்கும் நோக்கத்துடன் இலங்கை கடற்படை, நாட்டை சுற்றியுள்ள கடல் மற்றும் கரையோர பகுதிகளில் ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வட மத்திய கடற்படை கட்டளைக்கு உட்பட்ட SLNS புவனேகாவின் P 175 இன் கரையோர ரோந்துக் கப்பல் நேற்று குருசபாடு கடற்பகுதியில் சந்தேகத்திற்கிடமான ஒரு படகு ஒன்றை இடைமறித்து மேற்கொண்ட விசாரணையின் போது, குறித்த சந்தேக நபர்கள் கடல் வழியாக வெளிநாட்டிற்கு சட்டவிரோதமாக குடியேற முயற்சித்தமைக்காக கடற்படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 02 படகோட்டிகள் உட்பட 04 ஆண்களும் , 18 வயதுக்கு மேற்பட்ட 2 பெண்கள் மற்றும் 18 வயதுக்குட்பட்ட 04 பேரும் உள்ளங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சந்தேக நபர்கள் பேசாலை, உருமலை, கிளிநொச்சி மற்றும் கந்தளே ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்கள் தலைமன்னார் பொலிஸாரிடம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

பிந்திய செய்திகள்

Main image

22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 6 ஆம் மற்றும் 7 ஆம் திகதிகளில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள பாராளுமன்ற விவக

Main image

மத வழிபாட்டு தலங்களில் சூரிய சக்தியிலான மின் படலங்களை பொருத்துவது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்

Main image

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 26ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா, எதிர்வரும் 1ஆம் மற்றும் உஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளதாக உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம

Main image

அரசாங்க ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளியிடும் போது பின்பற்ற வேண்டிய முறைமை தொடர்பில் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் மா

Main image

அம்பாறை மாவட்டத்தில் சிறுபோக வேளாண்மை செய்கை ஆரம்பமாகி உள்ள நிலையில் அதிகளவிலான முதலைகள் வெளியேறி மக்கள் குடியிருப்புகளுக்குள் செல்கின்றன.

Main image

ஹோகந்தர வித்யாராஜ மாவத்தை பகுதியிலுள்ள வீடொன்றுக்கு முன்பாக மகன் ஒருவர் தனது தாய் மற்றும் தந்தையை மண்வெட்டி மற்றும் கத்தியால் தாக்கியுள்ளார்.

Main image

கொழும்பு, பாலத்துரை, கஜீமாவத்தை அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து நிவாரணங்களையும் உடன

Main image

எதிர்காலத்தில் நாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்படாதிருக்க உற்பத்திகளை ஊக்கு விக்கும் அரசாங்கத்தின் ஏற்பாட்டுக் அமைய சிறு தொழில் முயற்சியாளர்களை ஊக்கப்படு

Main image

பொருளாதார நெருக்கடி மற்றும் நிதி பற்றாக்குறை காரணமாக, வடமாகாணத்தில் சிறுவர் இல்லங்களுக்கு தமது குழந்தைகளை அனுப்புபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளத