காதலியை கண்காணிக்க அபாயா அணிந்திருந்த இளைஞன் கைது!

Main image
Image

முஸ்​லிம் பெண்கள் அணியும் அபாயாவை அணிந்துகொண்டு, அங்கும் இங்கும் அலைந்து திரிந்து கொண்டிருந்த முஸ்லிம் இளைஞன், கைது செய்யப்பட்டுள்ளார். காலி ரயில் நிலையத்தில் இவ்வாறு அலைந்து கொண்டிருந்த போது, அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகளால் பிடித்து, காலி பொலிஸாரிடம் அவ்விளைஞன் ஒப்படைக்கப்பட்டுள்ளார். காலி மக்ளுவவை வசிப்பிடமாகக் கொண்ட 27 வயதான முஸ்லிம் இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (19) காலை ரயில் நிலையத்துக்கு வந்திருந்த அவ்விளைஞன், கொழும்புக்குச் செல்வதற்காக ரயில் பற்றுச்சீட்டை பெற்றுள்ளார். அவரது குரல் தொடர்பில் சந்தேகம் அடைந்த பாதுகாப்பு அதிகாரிகள், அவரை பின்தொடர்ந்து கண்காணித்துள்ளனர். எனினும், முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடையுடன் அலைந்து திரிபவர் ஆண்ணொருவர் என்பதை பாதுகாப்பு அதிகாரிகள் இனங்கண்டு கொண்டனர். அதன்பின்னர் அவரை பிடித்து விசாரணைக்கு உட்படுத்தினர்.

தன்னுடைய காதலி இன்னுமொருவருடன் தொடர்பில் இருக்கிறார் என கேள்விப்பட்டேன். அவ்விருவரும் காலி ரயில் நிலையத்துக்கு வருகின்றனர் என்றும் தகவல் கிடைத்தது. அதன்பின்னரே, இவ்வாறு முகத்தை மறைத்துக்கொண்டு, பெண்களின் உடையில் இங்கு வந்தேன் என தெரிவித்துள்ளார்.

அந்த அபாயா உடையானது, அவ்விளைஞனின் தாயுடையது என்றும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது. எனினும், அவ்விளைஞனை ரயில் பாதுகாப்பு அதிகாரிகள், பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். ​மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பிந்திய செய்திகள்

Main image

22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 6 ஆம் மற்றும் 7 ஆம் திகதிகளில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள பாராளுமன்ற விவக

Main image

மத வழிபாட்டு தலங்களில் சூரிய சக்தியிலான மின் படலங்களை பொருத்துவது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்

Main image

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 26ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா, எதிர்வரும் 1ஆம் மற்றும் உஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளதாக உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம

Main image

அரசாங்க ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளியிடும் போது பின்பற்ற வேண்டிய முறைமை தொடர்பில் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் மா

Main image

அம்பாறை மாவட்டத்தில் சிறுபோக வேளாண்மை செய்கை ஆரம்பமாகி உள்ள நிலையில் அதிகளவிலான முதலைகள் வெளியேறி மக்கள் குடியிருப்புகளுக்குள் செல்கின்றன.

Main image

ஹோகந்தர வித்யாராஜ மாவத்தை பகுதியிலுள்ள வீடொன்றுக்கு முன்பாக மகன் ஒருவர் தனது தாய் மற்றும் தந்தையை மண்வெட்டி மற்றும் கத்தியால் தாக்கியுள்ளார்.

Main image

கொழும்பு, பாலத்துரை, கஜீமாவத்தை அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து நிவாரணங்களையும் உடன

Main image

எதிர்காலத்தில் நாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்படாதிருக்க உற்பத்திகளை ஊக்கு விக்கும் அரசாங்கத்தின் ஏற்பாட்டுக் அமைய சிறு தொழில் முயற்சியாளர்களை ஊக்கப்படு

Main image

பொருளாதார நெருக்கடி மற்றும் நிதி பற்றாக்குறை காரணமாக, வடமாகாணத்தில் சிறுவர் இல்லங்களுக்கு தமது குழந்தைகளை அனுப்புபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளத