விபச்சார விடுதி முற்றுகை: இரு பெண்கள் உட்பட நால்வர் கைது- 30 தோட்டாக்களும் மீட்பு

Main image
Image

வவுனியா தேக்கவத்தை பகுதியில் விபச்சார விடுதி ஒன்று பொலிசாரால் இன்று (19) பிற்பகல் முற்றுகையிடப்பட்டதுடன், இரு பெண்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டதுடன், விடுதியில் இருந்து ரி 56 ரக 30 தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன. வவுனியா பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜே.ஏ.ஏ.எஸ்.ஜெயக்கொடி தலைமையில் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் மற்றும் மது ஒழிப்பு பிரிவு பொலிசார் மோப்ப நாயின் உதவியுடன் வவுனியா தேக்கவத்தை பகுதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றை முற்றுகையிட்டு சோதனை நடத்தினர்.

இதன் போது குறித்த விடுதியில் தங்கியிருந்த இரு பெண்கள், விடுதி முகாமையாளரான ஓய்வு பெற்ற இராணுவ வீரர் உட்பட நான்கு பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர். அத்துடன் குறித்த விடுதியில் பொலிசார் சோதனை செய்ததால் அங்கிருந்து பெண்கள் தப்பியோடும் வகையில் சுவர் ஒன்றில் சூட்சுமமான முறையில் பாதை ஒன்றும் அமைக்கப்பட்டு இருந்தமை பொலிசாரால் கண்டு பிடிக்கப்பட்டது. மேலும் குறித்த விடுதியில் பொலிசார் சோதனை செய்த போது மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இயங்கு நிலையில் உள்ள ரி 56 ரகத்தினை சேர்ந்த 30 தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த விடுதி ஒய்வுபெற்ற இராணுவ வீரருடையது என்பதுடன் கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிசார் விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

Main image

22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 6 ஆம் மற்றும் 7 ஆம் திகதிகளில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள பாராளுமன்ற விவக

Main image

மத வழிபாட்டு தலங்களில் சூரிய சக்தியிலான மின் படலங்களை பொருத்துவது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்

Main image

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 26ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா, எதிர்வரும் 1ஆம் மற்றும் உஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளதாக உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம

Main image

அரசாங்க ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளியிடும் போது பின்பற்ற வேண்டிய முறைமை தொடர்பில் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் மா

Main image

அம்பாறை மாவட்டத்தில் சிறுபோக வேளாண்மை செய்கை ஆரம்பமாகி உள்ள நிலையில் அதிகளவிலான முதலைகள் வெளியேறி மக்கள் குடியிருப்புகளுக்குள் செல்கின்றன.

Main image

ஹோகந்தர வித்யாராஜ மாவத்தை பகுதியிலுள்ள வீடொன்றுக்கு முன்பாக மகன் ஒருவர் தனது தாய் மற்றும் தந்தையை மண்வெட்டி மற்றும் கத்தியால் தாக்கியுள்ளார்.

Main image

கொழும்பு, பாலத்துரை, கஜீமாவத்தை அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து நிவாரணங்களையும் உடன

Main image

எதிர்காலத்தில் நாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்படாதிருக்க உற்பத்திகளை ஊக்கு விக்கும் அரசாங்கத்தின் ஏற்பாட்டுக் அமைய சிறு தொழில் முயற்சியாளர்களை ஊக்கப்படு

Main image

பொருளாதார நெருக்கடி மற்றும் நிதி பற்றாக்குறை காரணமாக, வடமாகாணத்தில் சிறுவர் இல்லங்களுக்கு தமது குழந்தைகளை அனுப்புபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளத