சிறப்பாக நடைபெற்ற சம்மாந்துறை பத்திரகாளியம்மன் ஆலய பாற்குட பவனி

Main image
Image

வரலாற்று பிரசித்தி பெற்ற சம்மாந்துறை தமிழ் குறிச்சி ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானத்தின் வருடாந்த அலங்கார உற்சவத்திற்கான பாற்குடபவனி, நேற்று (19) திங்கட்கிழமை ஆலய பரிபாலன சபை தலைவர் சீனித்தம்பி சுப்பிரமணியம் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. கோரக்கர் பிள்ளையார் ஆலயத்தில் இருந்து பாற்குடபவனி பிரதான வீதி வழியாக பத்திரகாளி அம்மன் ஆலயத்தை சென்றடைந்தது.

ஆலயத்தின் வருடாந்த உற்சவம் மற்றும் தீமிதிப்பு வைபவம் கடந்த 17 ஆம் திகதி சனிக்கிழமை கதவு திறத்தலுடன் ஆரம்பமாகியது. தொடர்ச்சியாக 10 நாட்கள் திருவிழாக்கள் இடம் பெற்று 26 ஆம் திகதி திங்கட்கிழமை தீமிதிப்பு வைபவத்துடன் நிறைவடைகிறது. தினமும் பகல் 12 மணிக்கு மதிய பூஜையும் மாலை 6 மணிக்கு இரவு பூஜை யும் இடம்பெறும் என ஆலய பரிபாலன சபை தலைவர் சீனித்தம்பி சுப்பிரமணியம் தெரிவித்தார். ஆலய பிரதம பூசகர் குமாரகுலசிங்கம் லோகேஷ் தலைமையில் சடங்குகள் இடம்பெறுகின்றது நேற்று  19ஆம் தேதி திங்கட்கிழமை ஸ்ரீ கோரக்கர் பிள்ளையார் ஆலயத்திலிருந்து பால்குட பவனி இடம்பெற்றது.

23ஆம் தேதி வெள்ளிக்கிழமை வீரகம்பம் வெட்டல் அதனை தொடர்ந்து 25 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நோன்புக் கட்டல் சடங்கு இடம் பெறும். 26 ஆம் தேதி திங்கட்கிழமை காலை 6 மணிக்கு ஆராதனையும் தீமிதிப்பு வைபவமும் இடம்பெற இருப்பதாக ஆலய பரிபாலன சபை தலைவர் சீனித்தம்பி சுப்பிரமணியம் மேலும் தெரிவித்தார் . வழமை போல அக்டோபர் 05 ஆம் தேதி கௌரி விரதம் இடம்பெறும்.

பிந்திய செய்திகள்

Main image

வீடொன்றிலிருந்து காணாமல் போன குழந்தை ஒன்று உர பையில் சுற்றி முட்புதரில் வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

Main image

விரைவில் திருமணம் செய்ய உள்ள மற்றும் உயர் கல்விக்காக வெளிநாடுகளுக்கு செல்லவுள்ள இளைஞர்களுக்காக சமையல் பாடநெறி ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.

Main image

2022 ஆம் ஆண்டுக்கான ரீடர்ஸ் சோய்ஸ் விருதுகளின் முடிவுகளின் அடிப்படையில், உலகின் சிறந்த நட்பு நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இடம்பெற்றுள்ளது.அந்த வ

Main image

மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத்தின் அனுசரணையில் கவிக்கோ வெல்லவூர்க் கோபால் எழுதிய கொக்கட்டிச்சோலை குறவஞ்சி நூல் வெளியீடு மட்டக்களப்பு பிள்ளையாரடி  தம

Main image

சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளன.

Main image

காத்தான்குடி கடலில் தோணியில் மீன்பிடிக்க சென்ற மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Main image

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது மது போதையில் வந்த கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். யாழ்.

Main image

சாய்ந்தமருது கடலில் சடலமொன்று மிதந்து வருவதாக சாய்ந்தமருது பொலிஸாருக்கு மீனவர்களினால் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் கல்முனை கடற்படையின் உதவிய

Main image

நாட்டில் உள்ள குழந்தைகளுக்கும் தாய்மார்களுக்கும் தொடர்ந்தும் உயர்தர திரிபோஷ வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல த