வெளிநாட்டுக்கு செல்லும் பெண்களை விபச்சாரிகளாக்கும் கடத்தல்காரர்கள் – அரசின் அதிரடி நடவடிக்கை

Main image
Image

ஓமான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலாளர்களாக பெண்களை அழைத்துச் சென்று விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களைக் கண்டறிய பதினெட்டு நாடுகளுக்கு விசேட புலனாய்வுக் குழுக்களை அனுப்ப ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த நடவடிக்கை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் கீழ் உள்ள தேசிய மனித கடத்தல் தடுப்பு பணிக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன்படி புலனாய்வு சேவை, குடிவரவுத் திணைக்களம் உள்ளிட்ட அனைத்து துறைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் குழுவொன்றை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி கடத்தலில் ஈடுபட்ட முகவர்கள், தூதரக அதிகாரிகள், வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அதிகாரிகள், குடிவரவு அதிகாரிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. பெண் தொழிலாளிகளாக மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று முதலாளிகளால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட ஏராளமானோர் அந்நாடுகளில் தங்கியிருப்பது தெரியவந்துள்ளது. ஓமானில் உள்ள பாதுகாப்பான வீட்டில் அழுத்தம் தாங்க முடியாமல் சுயநினைவை இழந்த ஒன்பது பெண்கள் இருப்பதும் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

Main image

வீடொன்றிலிருந்து காணாமல் போன குழந்தை ஒன்று உர பையில் சுற்றி முட்புதரில் வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

Main image

விரைவில் திருமணம் செய்ய உள்ள மற்றும் உயர் கல்விக்காக வெளிநாடுகளுக்கு செல்லவுள்ள இளைஞர்களுக்காக சமையல் பாடநெறி ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.

Main image

2022 ஆம் ஆண்டுக்கான ரீடர்ஸ் சோய்ஸ் விருதுகளின் முடிவுகளின் அடிப்படையில், உலகின் சிறந்த நட்பு நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இடம்பெற்றுள்ளது.அந்த வ

Main image

மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத்தின் அனுசரணையில் கவிக்கோ வெல்லவூர்க் கோபால் எழுதிய கொக்கட்டிச்சோலை குறவஞ்சி நூல் வெளியீடு மட்டக்களப்பு பிள்ளையாரடி  தம

Main image

சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளன.

Main image

காத்தான்குடி கடலில் தோணியில் மீன்பிடிக்க சென்ற மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Main image

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது மது போதையில் வந்த கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். யாழ்.

Main image

சாய்ந்தமருது கடலில் சடலமொன்று மிதந்து வருவதாக சாய்ந்தமருது பொலிஸாருக்கு மீனவர்களினால் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் கல்முனை கடற்படையின் உதவிய

Main image

நாட்டில் உள்ள குழந்தைகளுக்கும் தாய்மார்களுக்கும் தொடர்ந்தும் உயர்தர திரிபோஷ வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல த