08 மாதங்களில் 19 முச்சக்கரவண்டிகள் மாத்திரமே புதிதாக பதிவு

Main image
Image

இந்த வருடத்தின் முதல் எட்டு மாதங்களில் புதிதாக 19 முச்சக்கர வண்டிகள் மாத்திரமே பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார். மேற்படி எட்டு மாத காலப்பகுதியில் ஏனைய வகைகளில் சுமார் 15,000 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார். கடந்த 2021ஆம் ஆண்டில் 2,093 முச்சக்கர வண்டிகளும், 2020  ஆம் ஆண்டில் 7,150 முச்சக்கர வண்டிகளும், 2019  ஆம் ஆண்டில் 15,490 முச்சக்கர வண்டிகளும், 2018 ஆம் ஆண்டில் 20,063 முச்சக்கர வண்டிகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அறிக்கைகளின்படி, 2011 முதல் 2020 வரையான வருடாந்தம் சராசரியாக 50,000 புதிய முச்சக்கர வண்டி பதிவாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். 2011 ஆம் ஆண்டிலேயே அதிகூடிய அளவில் முச்சக்கர வண்டிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த ஆண்டில் 138,426 புதிய முச்சக்கர வண்டிகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இரண்டாவதாக அதிகளவில் முச்சக்கரவண்டி பதிவு செய்யப்பட்ட ஆண்டாக 2015ஆம் ஆண்டு காணப்படுகிறது. அவ்வாண்டில் 129,547 முச்சக்கர வண்டிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார். நாட்டில் தற்போது 1,184,339 பதிவு செய்யப்பட்ட முச்சக்கர வண்டிகளும், 4,833,928 பதிவு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களும் உள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டின் கடந்த எட்டு மாதங்களில் 6,209 மோட்டார் சைக்கிள்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் 964 கார்களும் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன.

பிந்திய செய்திகள்

Main image

வீடொன்றிலிருந்து காணாமல் போன குழந்தை ஒன்று உர பையில் சுற்றி முட்புதரில் வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

Main image

விரைவில் திருமணம் செய்ய உள்ள மற்றும் உயர் கல்விக்காக வெளிநாடுகளுக்கு செல்லவுள்ள இளைஞர்களுக்காக சமையல் பாடநெறி ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.

Main image

2022 ஆம் ஆண்டுக்கான ரீடர்ஸ் சோய்ஸ் விருதுகளின் முடிவுகளின் அடிப்படையில், உலகின் சிறந்த நட்பு நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இடம்பெற்றுள்ளது.அந்த வ

Main image

மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத்தின் அனுசரணையில் கவிக்கோ வெல்லவூர்க் கோபால் எழுதிய கொக்கட்டிச்சோலை குறவஞ்சி நூல் வெளியீடு மட்டக்களப்பு பிள்ளையாரடி  தம

Main image

சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளன.

Main image

காத்தான்குடி கடலில் தோணியில் மீன்பிடிக்க சென்ற மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Main image

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது மது போதையில் வந்த கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். யாழ்.

Main image

சாய்ந்தமருது கடலில் சடலமொன்று மிதந்து வருவதாக சாய்ந்தமருது பொலிஸாருக்கு மீனவர்களினால் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் கல்முனை கடற்படையின் உதவிய

Main image

நாட்டில் உள்ள குழந்தைகளுக்கும் தாய்மார்களுக்கும் தொடர்ந்தும் உயர்தர திரிபோஷ வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல த