ஒரே நாளில் 300 சிறப்பு மருத்துவர்கள் ஓய்வு

Main image
Image

அரச சேவையில் கடமையாற்றும் 60 வயதை பூர்த்தி செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளமையினால், எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு பின்னர் சுமார் 300 விசேட வைத்திய நிபுணர்கள் ஓய்வு பெறவுள்ளதாகவும், சுகாதாரத்துறை பெரும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாகவும் விசேட வைத்தியர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் லக்குமார் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.மேலும், ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான விசேட வைத்தியர்கள் ஓய்வு பெறும் தினமாக எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய வைத்தியசாலையில் 43 விசேட வைத்தியர்களும், கண்டி தேசிய வைத்தியசாலையில் 30 விசேட வைத்தியர்களும், கராப்பிட்டி போதனா வைத்தியசாலையில் 17 வைத்தியர்களும், சிறுவர் வைத்தியசாலையில் 15 பேரும், அபேக்ஷா வைத்தியசாலையில் 9 பேரும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி ஓய்வுபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இந்நாட்டில் கடமையாற்றும் 33 இரத்த மாற்று நிபுணர்களில் 08 பேர் எதிர்வரும் 31ஆம் திகதி ஓய்வுபெறவுள்ளதாக அவர் தெரிவித்தார். அவர்களில் இருவர் ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்டதாகவும், ஐந்து பேர் வெளிநாடு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இருவர் வெளிநாடு செல்லவுள்ள நிலையில், இரத்தம் ஏற்றுவதில் நிபுணத்துவம் பெற்ற 14 வைத்தியர்கள் மாத்திரமே இருப்பர் எனவும் தெரிவித்தார்.
சுகாதாரத் துறை எதிர்கொள்ளும் நெருக்கடியின் உள்ளமைக்கு சிறந்த உதாரணம் அபேக்ஷா வைத்தியசாலையில் எலும்பு மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு 2025 ஆம் ஆண்டில் திகதிகள் வழங்கப்படுவதை கூறலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

Main image

வீடொன்றிலிருந்து காணாமல் போன குழந்தை ஒன்று உர பையில் சுற்றி முட்புதரில் வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

Main image

விரைவில் திருமணம் செய்ய உள்ள மற்றும் உயர் கல்விக்காக வெளிநாடுகளுக்கு செல்லவுள்ள இளைஞர்களுக்காக சமையல் பாடநெறி ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.

Main image

2022 ஆம் ஆண்டுக்கான ரீடர்ஸ் சோய்ஸ் விருதுகளின் முடிவுகளின் அடிப்படையில், உலகின் சிறந்த நட்பு நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இடம்பெற்றுள்ளது.அந்த வ

Main image

மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத்தின் அனுசரணையில் கவிக்கோ வெல்லவூர்க் கோபால் எழுதிய கொக்கட்டிச்சோலை குறவஞ்சி நூல் வெளியீடு மட்டக்களப்பு பிள்ளையாரடி  தம

Main image

சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளன.

Main image

காத்தான்குடி கடலில் தோணியில் மீன்பிடிக்க சென்ற மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Main image

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது மது போதையில் வந்த கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். யாழ்.

Main image

சாய்ந்தமருது கடலில் சடலமொன்று மிதந்து வருவதாக சாய்ந்தமருது பொலிஸாருக்கு மீனவர்களினால் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் கல்முனை கடற்படையின் உதவிய

Main image

நாட்டில் உள்ள குழந்தைகளுக்கும் தாய்மார்களுக்கும் தொடர்ந்தும் உயர்தர திரிபோஷ வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல த