பொருளாதார நெருக்கடியால் சிறுவர் இல்லங்களுக்கு குழந்தைகளை அனுப்புபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Main image
Image

பொருளாதார நெருக்கடி மற்றும் நிதி பற்றாக்குறை காரணமாக, வடமாகாணத்தில் சிறுவர் இல்லங்களுக்கு தமது குழந்தைகளை அனுப்புபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2022 ஜூன் மாதம் வரையில், 246 சிறுவர்கள், சிறுவர் இல்லங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக வடமாகாண சிறுவர் பராமரிப்பு மற்றும் நன்னடத்தை திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கில் உள்ள குழந்தைகள் சிறுவர் இல்லங்களுக்கு அனுப்பப்படுவதற்குப் பின்னால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பொருளாதார நெருக்கடி இருப்பதாக வடமாகாண சிறுவர் பராமரிப்பு மற்றும் நன்னடத்தை ஆணையாளர் குருபரன் இராஜேந்திரன் தெரிவித்தார். அரசாங்கம் எதிர்கொள்ளும் நிதி சவால்கள் காரணமாக சிறுவர் பராமரிப்பு மற்றும் நன்னடத்தைக்காக ஒதுக்கப்பட்ட மாகாண நிதி, திறைசேரியில் இருந்து விடுவிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். பொருளாதார நெருக்கடியின் தீவிரம் காரணமாக தாய்மார்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வதால் குழந்தைகளுக்கு, குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்பதனால் சிறுவர் இல்லங்களுக்கு  அனுப்படுவதாக அவர் குறிப்பிட்டார். 

பிந்திய செய்திகள்

Main image

நாட்டில் தேர்தலை நடத்துவதற்கான பொருத்தமான நேரம் இது என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

Main image

தங்க நகைகள் உட்பட பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தில் இரண்டு பெண்கள் உட்பட ஆறு பேர் அடங்கிய குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்

Main image

அப்புத்தளைக்கு சுற்றுலா சென்ற உள்நாட்டு சுற்றுலா பயணிகள் 20 பேர் குளவிக் கொட்டுக்கு இலக்காகி பங்கட்டி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச

Main image

திருகோணமலை, அபயபுர பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் தொல்பொருள் திணைக்கள உத்தியோகத்தர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Main image

களனி, கல்பொரல்ல, வராகொட வீதியில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றில் இன்று (05) காலை 6.30 மணி அளவில் தீ சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படு

Main image

இலங்கை துறைமுகத்திற்கு இரண்டு கப்பல்கள் உரத்தை ஏற்றிக்கொண்டு வந்தடைந்ததாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Main image

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் 10 ஆம் நாள் குழுநிலை விவாதம் இன்று சனிக்கிழமை காலை நாடாளுமன்றத்தில் ஆரம்பமானது.

Main image

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் கட்டுப்பாட்டு விலையை மீறி 60 ரூபாவுக்கு முட்டை விற்பனை செய்த வர்த்த