தந்தையை அடித்து கொன்று தீ வைத்த மகன் - தாய் மீதும் தாக்குதல்

Main image
Image

ஹோகந்தர வித்யாராஜ மாவத்தை பகுதியிலுள்ள வீடொன்றுக்கு முன்பாக மகன் ஒருவர் தனது தாய் மற்றும் தந்தையை மண்வெட்டி மற்றும் கத்தியால் தாக்கியுள்ளார். தாக்குதலினால் தந்தை உயிரிழந்துள்ளதுடன் தாய் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாலபே பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபரான மகன் தந்தையின் உடலை தீ வைத்து எரித்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ரஞ்சித் சேனாரத்ன என்ற 57 வயதான முச்சக்கரவண்டி சாரதியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். போதைப்பொருளுக்கு அடிமையாகி புனர்வாழ்வளிக்கப்பட்டிருந்த மகனை தாய் அண்மையில் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளதாகவும், தகராறு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

28 வயதுடைய சந்தேகநபரான மகன் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் தாயின் கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மாலபே பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பிந்திய செய்திகள்

Main image

நாட்டில் தேர்தலை நடத்துவதற்கான பொருத்தமான நேரம் இது என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

Main image

தங்க நகைகள் உட்பட பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தில் இரண்டு பெண்கள் உட்பட ஆறு பேர் அடங்கிய குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்

Main image

அப்புத்தளைக்கு சுற்றுலா சென்ற உள்நாட்டு சுற்றுலா பயணிகள் 20 பேர் குளவிக் கொட்டுக்கு இலக்காகி பங்கட்டி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச

Main image

திருகோணமலை, அபயபுர பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் தொல்பொருள் திணைக்கள உத்தியோகத்தர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Main image

களனி, கல்பொரல்ல, வராகொட வீதியில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றில் இன்று (05) காலை 6.30 மணி அளவில் தீ சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படு

Main image

இலங்கை துறைமுகத்திற்கு இரண்டு கப்பல்கள் உரத்தை ஏற்றிக்கொண்டு வந்தடைந்ததாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Main image

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் 10 ஆம் நாள் குழுநிலை விவாதம் இன்று சனிக்கிழமை காலை நாடாளுமன்றத்தில் ஆரம்பமானது.

Main image

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் கட்டுப்பாட்டு விலையை மீறி 60 ரூபாவுக்கு முட்டை விற்பனை செய்த வர்த்த