பல்கலைக்கழக மாணவர்கள் மீது மர்ம கும்பல் தாக்குதல்

Main image
Image

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது மது போதையில் வந்த கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். யாழ். பல்கலைக்கழகத்திற்கு முன்பாக உள்ள வீதி வழியாக நேற்றைய தினம் சென்று கொண்டிருந்த 4 பல்கலைக்கழக மாணவர்கள் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. முச்சக்கர வண்டி ஒன்றில் மது போதையில் வந்த நான்கு பேர் கொண்ட குழுவே மாணவர்களை வழி மறித்து தாக்கி விட்டு அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர். தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த இரு மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

பிந்திய செய்திகள்

Main image

நாட்டில் தேர்தலை நடத்துவதற்கான பொருத்தமான நேரம் இது என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

Main image

தங்க நகைகள் உட்பட பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தில் இரண்டு பெண்கள் உட்பட ஆறு பேர் அடங்கிய குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்

Main image

அப்புத்தளைக்கு சுற்றுலா சென்ற உள்நாட்டு சுற்றுலா பயணிகள் 20 பேர் குளவிக் கொட்டுக்கு இலக்காகி பங்கட்டி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச

Main image

திருகோணமலை, அபயபுர பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் தொல்பொருள் திணைக்கள உத்தியோகத்தர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Main image

களனி, கல்பொரல்ல, வராகொட வீதியில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றில் இன்று (05) காலை 6.30 மணி அளவில் தீ சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படு

Main image

இலங்கை துறைமுகத்திற்கு இரண்டு கப்பல்கள் உரத்தை ஏற்றிக்கொண்டு வந்தடைந்ததாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Main image

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் 10 ஆம் நாள் குழுநிலை விவாதம் இன்று சனிக்கிழமை காலை நாடாளுமன்றத்தில் ஆரம்பமானது.

Main image

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் கட்டுப்பாட்டு விலையை மீறி 60 ரூபாவுக்கு முட்டை விற்பனை செய்த வர்த்த