விரைவில் திருமணம் செய்ய உள்ளவர்களுக்கு அரசாங்கம் வழங்கும் வாய்ப்பு

Main image
Image

விரைவில் திருமணம் செய்ய உள்ள மற்றும் உயர் கல்விக்காக வெளிநாடுகளுக்கு செல்லவுள்ள இளைஞர்களுக்காக சமையல் பாடநெறி ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த பாடநெறியானது சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனத்தினால் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அதன் தலைவர் சிரந்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நிலவியுள்ள பொருளாதார நெருக்கடியில் தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரும் தொழிலுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளமையினால் இளைஞர் யுவதிகள் தங்களுக்கு தேவையான உணவினை தாமே தயாரித்துக்கொள்ள வேண்டிய நிலைமைக்கு நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். அதேநேரம் வெளிநாடுகளுக்கு உயர் கற்கை நெறிகளுக்காக செல்லவிருப்பவர்களுக்கும் இந்த பாடநெறி மிகவும் உறுதுணையாக அமையும் என அந்த நிறுவனத்தின் தலைவர் சிரந்த பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பெற்றோர்கள் மத்தியில் சுற்றுலா துறை குறித்து தவறான எண்ணங்கள் காணப்படுவதனால் தங்களது பிள்ளைகளை சுற்றுலா துறையில் ஈடுபடுத்துவதற்கு அச்சம் கொள்கின்றனர். முதலாவதாக இவ்வாறான எண்ணங்களை அகற்றி வருமானம் தரக்கூடிய சுற்றுலா துறையை தேர்ந்தெடுக்க தனது பிள்ளைகளுக்கு பெற்றோர் வழிகாட்டியாக மாறவேண்டும் எனவும் சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனத்தின் தலைவர் சிரந்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

Main image

நாட்டில் தேர்தலை நடத்துவதற்கான பொருத்தமான நேரம் இது என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

Main image

தங்க நகைகள் உட்பட பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தில் இரண்டு பெண்கள் உட்பட ஆறு பேர் அடங்கிய குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்

Main image

அப்புத்தளைக்கு சுற்றுலா சென்ற உள்நாட்டு சுற்றுலா பயணிகள் 20 பேர் குளவிக் கொட்டுக்கு இலக்காகி பங்கட்டி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச

Main image

திருகோணமலை, அபயபுர பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் தொல்பொருள் திணைக்கள உத்தியோகத்தர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Main image

களனி, கல்பொரல்ல, வராகொட வீதியில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றில் இன்று (05) காலை 6.30 மணி அளவில் தீ சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படு

Main image

இலங்கை துறைமுகத்திற்கு இரண்டு கப்பல்கள் உரத்தை ஏற்றிக்கொண்டு வந்தடைந்ததாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Main image

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் 10 ஆம் நாள் குழுநிலை விவாதம் இன்று சனிக்கிழமை காலை நாடாளுமன்றத்தில் ஆரம்பமானது.

Main image

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் கட்டுப்பாட்டு விலையை மீறி 60 ரூபாவுக்கு முட்டை விற்பனை செய்த வர்த்த