நாட்டில் சிறுவர் தொழுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Main image
Image

நாட்டில் சிறுவர் தொழுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தொழுநோய் முகாமையின் பணிப்பாளர் டொக்டர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார். கடந்த வருடம் முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 250 சிறுவர் தொழுநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர்களில் அதிகமானவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறினார். நாட்டில் தொழுநோயாளிகள் அதிகரிப்பதற்கு கடந்த 3 வருடங்களாக நோயாளர்கள் அடையாளம் காணப்படாமையே காரணம் எனவும் இது தொடர்பில் அரசாங்கத்தின் பொறுப்புள்ள தரப்பினர் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கம்பஹா மாவட்டத்தில் இனங்காணப்படாத தொழுநோயாளிகள் இருக்கும் சூழ்நிலை காணப்படுவதால், அவர்களைக் கண்டறிந்து சிகிச்சைக்காக அனுப்பும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக கம்பஹா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் டபிள்யூ.எம்.ஐ.கே. வன்னிநாயக்க தெரிவித்தார். இவ்வருடம் கம்பஹா மாவட்டத்தில் 124 தொழுநோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடளாவிய ரீதியில் இனங்காணப்பட்டுள்ள தொழுநோயாளிகளில் சுமார் 13 வீதமானவர்கள் பாடசாலை மாணவர்கள் எனவும் பெற்றோர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பிந்திய செய்திகள்

Main image

நாட்டில் தேர்தலை நடத்துவதற்கான பொருத்தமான நேரம் இது என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

Main image

தங்க நகைகள் உட்பட பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தில் இரண்டு பெண்கள் உட்பட ஆறு பேர் அடங்கிய குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்

Main image

அப்புத்தளைக்கு சுற்றுலா சென்ற உள்நாட்டு சுற்றுலா பயணிகள் 20 பேர் குளவிக் கொட்டுக்கு இலக்காகி பங்கட்டி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச

Main image

திருகோணமலை, அபயபுர பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் தொல்பொருள் திணைக்கள உத்தியோகத்தர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Main image

களனி, கல்பொரல்ல, வராகொட வீதியில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றில் இன்று (05) காலை 6.30 மணி அளவில் தீ சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படு

Main image

இலங்கை துறைமுகத்திற்கு இரண்டு கப்பல்கள் உரத்தை ஏற்றிக்கொண்டு வந்தடைந்ததாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Main image

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் 10 ஆம் நாள் குழுநிலை விவாதம் இன்று சனிக்கிழமை காலை நாடாளுமன்றத்தில் ஆரம்பமானது.

Main image

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் கட்டுப்பாட்டு விலையை மீறி 60 ரூபாவுக்கு முட்டை விற்பனை செய்த வர்த்த