உள்நாட்டு சுற்றுலா பயணிகள் 20 பேர் குளவிக் கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதி

அப்புத்தளைக்கு சுற்றுலா சென்ற உள்நாட்டு சுற்றுலா பயணிகள் 20 பேர் குளவிக் கொட்டுக்கு இலக்காகி பங்கட்டி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மட்டக்களப்பு பகுதியிலிருந்து 17 பேரும், இரத்தினபுரியிலிருந்து மூன்று பேருமாக அப்புத்தளைக்குச் சென்று சுற்றுலா இடங்களை பார்வையிட்டனர்.
அப்போது அங்கே மரமொன்றிலிருந்து குளவிக்கூடு கலைந்து இவர்களை கொட்ட தொடங்கியுள்ளன. குறித்த சம்பவம் நேற்று (04) இடம்பெற்றுள்ளது. உடனடியாக அங்குகூடிய இளைஞர்கள், குளவிகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர புகையை மூட்டிய பின்னர் குளவிகள் களைந்து சென்றுள்ளன.
குளவிக் கொட்டுக்கு இலக்காகிய 20 பேரும் பங்கட்டி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இவர்களுக்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. வைத்தியசாலையில் சிகிச்சை பெறுபவர்களில் 10 பெண்களும் மூன்று சிறார்களும் ஏழு ஆண்களும் அடங்குவர்.
பிந்திய செய்திகள்
வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புகளை பெற்றுத் தருவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட இளம்பெண் ஒருவரும் பெண்ணொருவரும் சிலாபத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்
இலங்கையர்களுக்கு மீண்டும் ஈ-விசா (e-visa) அனுமதி வழங்க இந்தியா தீர்மானித்துள்ளது.
தற்போது நிலவி வருகின்ற சீரற்ற கால நிலை காரணமாக ஏற்பட்டுள்ள கடும்குளிருடன் கூடிய மழை மற்றும் வேகமான காற்று காரணமாக கிளிநொச்சியில் பலகிராமங்களி
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட மட்டக்களப்பு நகர் உள்ளிட்ட பகுதிகளில் உணவு தயாரிப்பில் ஈடுபடும் ஹோட்டல்கள், பாடசாலைகளின
உள்ளூராட்சி தேர்தலை நடத்த தோராயமாக, 10 பில்லியன் ரூபாய் செலவு ஏற்படுமென தேசிய தேர்தல் ஆணையம் மதிப்பீட்டுள்ளது.
தென்மேற்கு வங்காளவிரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்பட்ட தீவிர புயலானது (Severe Cyclonic Storm) கடந்த 06 மணித்தியாலத்தில் 12km/h வேகத்தில் மே
நாட்டில் டெங்கு நோயின் பரவல் வேகமாக அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்காள விரிகுடா மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்பட்ட ஆழ்ந்த தாழமுக்கமானது கடந்த 06 மணித்தியாலத
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் எனக் கூறி பம்பலப்பிட்டி டூப்ளிகேஷன் வீதியில் காரை நிறுத்தி 27 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையடித்த நபர் ஒருவர்