2023ஆம் வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்புக்கான வாக்கெடுப்பு இன்று

Main image
Image

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்புக்கான வாக்கெடுப்பு இன்று (08) நடைபெறவுள்ளது. குழுவின் விவாதம் இன்றுடன் நிறைவடைந்து மாலை 05.00 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படும் என பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நிதியமைச்சராக கடந்த நவம்பர் 14ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் 15ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை இடம்பெற்றதையடுத்து, இரண்டாம் வாசிப்புக்கான வாக்கெடுப்பு 22ஆம் திகதி பிற்பகல் நடைபெற்றது. அங்கு வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 121 பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிராக 84 பாராளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதன்படி, வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 37 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
 

பிந்திய செய்திகள்

Main image

வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புகளை பெற்றுத் தருவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட இளம்பெண் ஒருவரும் பெண்ணொருவரும் சிலாபத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்

Main image

இலங்கையர்களுக்கு மீண்டும் ஈ-விசா (e-visa) அனுமதி வழங்க இந்தியா தீர்மானித்துள்ளது.

Main image

தற்போது நிலவி வருகின்ற சீரற்ற கால நிலை காரணமாக ஏற்பட்டுள்ள கடும்குளிருடன் கூடிய மழை மற்றும் வேகமான காற்று காரணமாக கிளிநொச்சியில் பலகிராமங்களி

Main image

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட மட்டக்களப்பு நகர் உள்ளிட்ட பகுதிகளில் உணவு தயாரிப்பில் ஈடுபடும் ஹோட்டல்கள், பாடசாலைகளின

Main image

உள்ளூராட்சி தேர்தலை நடத்த தோராயமாக, 10 பில்லியன் ரூபாய் செலவு ஏற்படுமென தேசிய தேர்தல் ஆணையம் மதிப்பீட்டுள்ளது.

Main image

தென்மேற்கு வங்காளவிரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்பட்ட தீவிர புயலானது (Severe Cyclonic Storm) கடந்த 06 மணித்தியாலத்தில் 12km/h வேகத்தில் மே

Main image

நாட்டில் டெங்கு நோயின் பரவல் வேகமாக அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

Main image

தென்மேற்கு வங்காள விரிகுடா மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்பட்ட ஆழ்ந்த தாழமுக்கமானது கடந்த 06 மணித்தியாலத

Main image

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் எனக் கூறி பம்பலப்பிட்டி டூப்ளிகேஷன் வீதியில் காரை நிறுத்தி 27 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையடித்த நபர் ஒருவர்