பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் எனக் கூறி 27 இலட்சம் ரூபா பணம் கொள்ளை

Main image
Image

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் எனக் கூறி பம்பலப்பிட்டி டூப்ளிகேஷன் வீதியில் காரை நிறுத்தி 27 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையடித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (07) பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், சந்தேக நபரும் மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் எனக் கூறி மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் காரை நிறுத்தி சோதனையிட முற்பட்ட போது காருக்குள் இருந்த நபருடன் இணைந்து காரின் உரிமையாளரிடம் 27 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையடுத்து தப்பிச் சென்றுள்ளனர். மோட்டார் சைக்கிளில் ஒருவர் தப்பிச் சென்றுள்ளதுடன் கார் உரிமையாளரும் மற்றுமொரு நபரும் இணைந்து தப்பியோடிய நபரை பொன்சேகா வீதியில் வைத்து பிடித்து பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பில் வசிக்கும் 41 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது. சந்தேகநபர் இன்று புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். பம்பலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பிந்திய செய்திகள்

Main image

மட்டக்களப்பில் 7 வயது சிறுமியை தந்தை மற்றும் மாமனார் இணைந்து கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ள நிலையில் குறித்த சிறுமி தற்பொழுது மட்டக்களப்பு ப

Main image

டுவிட்டரை உருவாக்கியவர்களில் ஒருவரான ஜாக் டோர்சி தற்போது புதிய சமூக ஊடக தளம் ஒன்றை உருவாக்கி உள்ளார். இதன் பெயர் ப்ளூஸ்கை.

Main image

மனிதனின் நவீன கண்டுபிடிப்புகள் ஏராளம். அவற்றில் ஒன்றுதான் ஆளில்லாமல் வானில் பறக்கும் ட்ரோன் விமானம்.

Main image

சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி தொடர்பிலான திட்டத்தை நடைமுறைப்படுத்தும் யோசனை பாராளுமன்றத்தில் 95 மேலதிக வாக்குகளினால் நேற்று நிறைவேற்றப்பட்டது.

Main image

மினுவாங்கொடையில் அமைந்துள்ள தனியார் பாடசாலையொன்றின் பெண் ஆசிரியை ஒருவர் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தெரிவிக்கவில்லை எனக் கூறி பலவந்தமாக முத்தமிட்ட

Main image

ஏப்ரல் பண்டிகைக் காலத்தில் நடைபாதை வியாபாரிகள் பொதுமக்களுக்கு இடையூறு இன்றி வியாபாரத்தில் ஈடுபடுவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை

Main image

ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையத்தின் தரவுகளின்படி, மரக்கறிகளின் விலை கடந்த செவ்வாய்க்கிழமையுடன் (04ஆம் திகதி) ஒப்பிடுகைய

Main image

வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புகளை பெற்றுத் தருவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட இளம்பெண் ஒருவரும் பெண்ணொருவரும் சிலாபத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்

Main image

இலங்கையர்களுக்கு மீண்டும் ஈ-விசா (e-visa) அனுமதி வழங்க இந்தியா தீர்மானித்துள்ளது.